மகளிர் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி


மகளிர் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி
x

16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தூர்,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தஹிலா மெக்ராத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி தடுமாறியது. அந்த அணியில் லாரா வால்வரிட், சினாலோ ஜாப்டா மட்டும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். லாரா வால்வரிட் 31 ரன்களும், சினாலோ ஜாப்டா 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 24 ஓவர்களில் 97 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசி அலனா கிங் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது .

தொடக்க வீராங்கனைகளாக போப் லிட்ச்பீல்ட் , ஜார்ஜியா வால் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் போப் லிட்ச்பீல்ட் 5 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் எல்லிஸ் பெர்ரி ரன் எதுவும் எடுக்காமலும் , அன்னாபெல் சதர்லேண்ட் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .பின்னர் ஜார்ஜியா வால் , பெத் மூனி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இதனால் 16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

1 More update

Next Story