உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்..?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்..?
x

நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.

சென்னை,

இந்திய அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அத்துடன் 4-வது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இந்த தொடருக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 61.90 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது. இப்போது இரு டெஸ்டிலும் தோற்றதால் இந்தியா 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது, ஆஸ்திரேலியா 100 சதவீத புள்ளியுடன் ‘நம்பர் 1’ இடத்தில் நீடிக்கிறது.

இந்த சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில் குறைந்தபட்சம் 7-ல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது இந்தியா. 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் முன்னேற முடியும். மாறாக 2-க்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வியடைந்தால் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.

இந்திய அணிக்கு எஞ்சியுள்ள 9 போட்டிகள் விவரம்: இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தலா 2 போட்டிகளும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளும் உள்ளன.

1 More update

Next Story