உங்களுக்கு 22 ரோபோக்கள் தேவைப்படாது - சிராஜ் விவகாரத்தில் ஐ.சி.சி.-ஐ விளாசிய நாசர் உசேன்


உங்களுக்கு 22 ரோபோக்கள் தேவைப்படாது - சிராஜ் விவகாரத்தில் ஐ.சி.சி.-ஐ விளாசிய நாசர் உசேன்
x

விக்கெட் வீழ்த்திய ஆக்ரோஷத்தில் பென் டக்கட்டின் தோள் மீது இடித்ததால் சிராஜுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில், பென் டக்கெட் பும்ராவிடம் கேட்ச் ஆனார். விக்கெட்டை கைப்பற்றியதும் முகமது சிராஜ், டக்கெட்டின் முகத்துக்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி வெறித்தனமாக கொண்டாடினார். அத்துடன் அவரது தோள்பட்டை மீது லேசாக இடித்தார். ஆனால் டக்கெட் எதுவும் பேசாமல் அதிருப்தியுடன் வெளியேறினார்.

உடல் ரீதியாக உரசுவது வீரர்களின் நடத்தை விதிமீறல் என்பதால் முகமது சிராஜுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் பரபரப்பான சூழலில் போட்டி நடைபெறும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சகஜம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசேர் உசேன் விமர்சித்துள்ளார். மேலும் களத்தில் உணர்ச்சிகளின்றி விளையாட உங்களுக்கு 22 ரோபோக்கள் தேவைப்படாது என்றும் அவர் ஐ.சி.சி.-ஐ விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜாக் கிராவ்லியிடம் இந்திய அணியினர் மோதச் சென்றது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சமாகும். அன்றைய நாள் மாலையில் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 90 வினாடிகள் தாமதமாக ஆட்டத்தைத் தொடங்கினார்கள். அந்த வகையில் அவர்கள் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

மறுபுறம் அது இந்திய அணியினரை கோபப்படுத்தியது. குறிப்பாக சிராஜ் ஆக்ரோஷமடைந்தார். பொதுவாக சிராஜ் ஆக்ரோஷமாக மாறும்போது சிறந்த கிரிக்கெட்டராக செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன். அதற்காக அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. அவர் டக்கெட்டை நோக்கி சரமாரியாகப் பேசவில்லை. இது உணர்ச்சிகளின் விளையாட்டு என்று நான் நினைக்கிறேன். களத்தில் உணர்ச்சிகளின்றி விளையாட உங்களுக்கு 22 ரோபோக்கள் தேவைப்படாது" என்று கூறினார்.

1 More update

Next Story