ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பை - கேரளா அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @IndSuperLeague / @MumbaiCityFC / @KeralaBlasters
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
கேரளா,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மோகன் பகான், கோவா, பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஒடிசா, மும்பை இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இந்த தொடரில் கேரளாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோத உள்ளன.
இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களம் இறங்குகிறது. அதேவேளையில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடும் கேரளா ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.