ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா எப்.சி. - பஞ்சாப் எப்.சி. ஆட்டம் 'டிரா'


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா எப்.சி. - பஞ்சாப் எப்.சி. ஆட்டம் டிரா
x

Image Courtesy: @IndSuperLeague / @RGPunjabFC / @OdishaFC

தினத்தந்தி 10 Feb 2025 9:39 PM IST (Updated: 11 Feb 2025 1:01 PM IST)
t-max-icont-min-icon

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

புவனேஸ்வர்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பஞ்சாப் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே ஒடிசா அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது.

இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இறுதிவரை அதற்கு பகன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

1 More update

Next Story