மகளிர் கால்பந்து தரவரிசை... இந்திய அணி முன்னேற்றம்

கோப்புப்படம்
சர்வதேச கால்பந்து சம்மேளனம், மகளிர் கால்பந்து அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
ஷூரிச்,
சர்வதேச கால்பந்து சம்மேளனம், மகளிர் கால்பந்து அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஸ்பெயின் அணி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதில் இருந்து முதலிடத்தில் இருந்த அமெரிக்கா 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
மகளிர் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடிய இங்கிலாந்து ஒரு இடம் முன்னேறி 4-வது இடம் வகிக்கிறது. பிரேசில் 4-ல் இருந்து 7-வது இடத்துக்கு சறுக்கியது. சுவீடன் 3-வது இடத்திலும், ஜெர்மனி 5-வது இடத்திலும் உள்ளன.
இந்தியா 7 இடங்கள் உயர்ந்து 63-வது இடத்தை பிடித்துள்ளது. தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story






