அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி வெற்றி


அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி வெற்றி
x

கோப்புப்படம்

96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

3-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவத்தை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இது ராணுவ அணிக்கு 2-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி சரிவில் இருந்து மீண்டு வந்து 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய கர்நாடக அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இன்னொரு ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-1என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் அணியை தோற்கடித்து போட்டியை வெற்றியோடு தொடங்கியது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு-போபால் என்.சி.ஓ.இ. (பிற்பகல் 2.30 மணி), இந்திய ராணுவம்-கர்நாடகா (மாலை 4.15 மணி), மலேசியா ஜூனியர்-மத்திய நேரடி வரிகள் வாரியம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story