ஆசிய கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கிய இந்தியா

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
ராஜ்கிர்,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியதுஇந்த போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 3 கோல்கள் அடித்தார்
இந்திய அணி தனது அடுத்த லீக்கில் ஜப்பானை நாளை சந்திக்கிறது.






