உதயநிதி ஸ்டாலினுடன் வள்ளுவர் கோட்டத்தை சுற்றி பார்த்த ஆக்கி வீரர்கள்


உதயநிதி ஸ்டாலினுடன் வள்ளுவர் கோட்டத்தை சுற்றி பார்த்த ஆக்கி வீரர்கள்
x
தினத்தந்தி 8 Dec 2025 6:18 PM IST (Updated: 8 Dec 2025 6:22 PM IST)
t-max-icont-min-icon

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதற்காக பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் வீரர்கள் மற்றும் சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு தலைவர் தையப் இக்ராம் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை சுற்றி பார்த்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story