ஜூனியர் ஆசிய ஆக்கி : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசு


ஜூனியர் ஆசிய ஆக்கி : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 16 Dec 2024 3:30 AM IST (Updated: 16 Dec 2024 3:30 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மகளிர் அணியை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கி இந்தியா பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மஸ்கட்,

9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.இதில் நேற்று மாலை நடந்த முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்னொரு அரையிறுதியில் சீனா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி றுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் அடித்தன . இதனால் ஆட்டம் சமனில் இருந்தது . இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கி இந்தியா பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.2 லட்சம் எனவும், ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

1 More update

Next Story