ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி: நாளை தொடக்கம்

மொத்தம் 72 போட்டிகள் நடத்தப்பட உள்ளது
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி: நாளை தொடக்கம்
Published on

மதுரை,

உலக கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டி மதுரை, சென்னையில் நாளை தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிகிறது. இதில் இந்தியா உள்பட மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. சென்னையில் 41 போட்டிகளும் மதுரையில் 31 போட்டிகள் என மொத்தம் 72 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மதுரையில் நடைபெறும் போட்டிகளில் 12 நாடுகள் பங்கேற்கிறது.

அதில் ஏ பிரிவில் ஜெர்மனி, கனடா. தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளும், டி பிரிவில் ஸ்பெயின். பெல்ஜியம், எகிப்து, நமிபியா அணிகளும், ஈ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் பங்கேற்க 12 நாட்டு அணியினரும் மதுரை வந்து விட்டனர். அவர்களுக்கு விமானநிலையத்தில் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்றதுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் தவில் வாத்தியங்கள் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுரை வந்த வெளிநாட்டு அணிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கையிழை மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி கொண்டிருக்கிறார்கள். அதனை பார்க்க பார்வையாளர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெருமளவில் மைதானம் நோக்கி வருகிறார்கள். அவர்களை போலீசார் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அனுமதிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com