வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி


வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 7 Aug 2024 1:48 PM IST (Updated: 7 Aug 2024 1:49 PM IST)
t-max-icont-min-icon

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாரீசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வினேஷ் போகத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட வினேஷ் போகத், தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ உடல் எடையை வினேஷ் குறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிர பயிற்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாரீசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story