ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஆக்கி அணியினர்


ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஆக்கி அணியினர்
x
தினத்தந்தி 10 Aug 2024 12:44 PM IST (Updated: 10 Aug 2024 12:51 PM IST)
t-max-icont-min-icon

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆண்கள் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின.

இந்த போட்டியில், இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய ஆக்கி அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியினர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 More update

Next Story