பாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கியில் தங்கப் பதக்கம் வென்றது நெதர்லாந்து

Image : AFP
ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது . இதில் ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவு ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.கடைசி வரை போராடிய ஜெர்மனி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. முன்னதாக நேற்று நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






