கடல் நீச்சலில் பதக்கம் வென்ற சென்னை வீரர்


கடல் நீச்சலில் பதக்கம் வென்ற சென்னை வீரர்
x

சென்னை திரும்பிய நிகிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

‘ஓஷன்மேன்’ எனும் கடல் நீச்சல் போட்டியின் இறுதி சுற்று துபாயில் நடந்தது. இதில் ஓபன் பந்தயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உத்வேகம் அளிக்கும் பிரிவில் பங்கேற்ற சென்னை தாம்பரத்தை சேர்ந்த எல்.நிகில் 5 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி 40 நிமிடம் 51 வினாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். நேற்று சென்னை திரும்பிய 15 வயதான நிகிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது தாயார் லட்சுமி கூறுகையில், ‘ஆட்டிசம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகன் நீச்சல் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அகாடமி மூலம் பயிற்சி மேற்கொள்ளும் அவர் ஏற்கனவே சில போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இப்போது துபாய் போட்டியில் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளை தமிழக அரசு அதிக அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எஸ்.டி.ஏ.டி. அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

1 More update

Next Story