செஸ் ஒலிம்பியாட்: 7-வது சுற்றில் இந்தியா வெற்றி


செஸ் ஒலிம்பியாட்: 7-வது சுற்றில் இந்தியா வெற்றி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Sept 2024 7:35 AM IST (Updated: 19 Sept 2024 7:58 AM IST)
t-max-icont-min-icon

ஓபன் பிரிவில் நேற்று நடந்த 7-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது.

புடாபெஸ்ட்,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் ஓபன் பிரிவில் நேற்று நடந்த 7-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் குகேஷ், சீன வீரர் யி வெய்-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர். முடிவில் இந்தியா 2.5 - 1.5 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி 7-வது வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.

இதன் பெண்கள் பிரிவில் நடந்த 7-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, ஜார்ஜியாவுடன் மோதியது. இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் 46-வது காய் நகர்த்தலில் பெலா கோடெனாஷ்விலியை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி, ஜாவாகிஷ்விலியை வீழ்த்தினார். ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி 7-வது வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.


Next Story