காமன்வெல்த் செஸ் போட்டி: சென்னை மாணவி அஸ்வினிகா வெண்கலப்பதக்கம் வென்றார்

16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
காமன்வெல்த் செஸ் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் 9-வது மற்றும் கடைசி சுற்றில் 51-வது காய் நகர்த்தலுக்கு பிறகு முசோபோரோ லோனேவை (போஸ்ட்வானா) தோற்கடித்து 7 புள்ளியுடன் வெண்கலம் பெற்றார்.
சென்னை கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாரின் மகளான அஸ்வினிகா நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
Related Tags :
Next Story






