உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி: மனுஷ் ஷா - தியா ஜோடி தகுதி

கோப்புப்படம்
உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி ஹாங்காங்கில் டிசம்பர் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி,
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதல் 16 இடங்களுக்குள் இருப்பவர்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் டாப்-8 இடம் வகிப்பவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி ஹாங்காங்கில் டிசம்பர் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்க இந்தியாவின் மனுஷ் ஷா-தியா சிதாலே இணை தகுதி பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து இந்த போட்டிக்கு தகுதி பெறும் முதல் ஜோடி இவர்கள் தான். சமீப கால போட்டிகளில் பெற்ற வெற்றி மற்றும் தரவரிசையில் ஏற்றம் காரணமாக கவுரவமிக்க இந்த போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story






