கிராண்ட் சுவிஸ் செஸ்: வைஷாலி, நிஹால் சரின் முன்னிலை


கிராண்ட் சுவிஸ் செஸ்: வைஷாலி, நிஹால் சரின் முன்னிலை
x

கோப்புப்படம்

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது.

சமர்கண்ட்,

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 7-வது சுற்று நடந்தது. ஓபன் பிரிவில் ஒரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 42-வது நகர்த்தலில் மேக்சிம் ரோட்ஷ்டினை (இஸ்ரேல்) வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நிஹால் சரின் 42-வது நகர்த்தலில் பர்ஹாம் மேக்சூட்லுவை (ஈரான்) வென்றார். உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 52-வது நகர்த்தலில் துருக்கியின் எடிஸ் குரெலிடம் தோல்வி அடைந்தார்.

தொடர்ச்சியாக 3-வது தோல்வியை தழுவிய குகேஷ் பட்டம் வெல்லும் வாய்ப்பையும் இழந்தார். 7-வது சுற்று முடிவில் ஜெர்மனியின் மேத்தியாஸ் புளுபாமும், இந்தியாவின் நிஹால் சரினும் தலா 5½ புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்கள்.

மகளிர் பிரிவில் தமிழகத்தின் வைஷாலி 7-வது சுற்றில் வெற்றியை தனதாக்கினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் 30-வது நகர்த்தலில் சீனாவின் குவா கீக்கு ‘செக்’ வைத்து 5-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். கேத்ரினோ லாக்னோ (ரஷியா) 5½ புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.

1 More update

Related Tags :
Next Story