கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்


கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்
x

கோப்புப்படம்

பிரக்ஞானந்தா மேலும் பல சாதனைகள் படைத்து இந்தியாவின் புகழை உலகெங்கும் பரப்ப வாழ்த்துகிறேன் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இன்று, உலக சதுரங்க அரங்கில் இந்தியாவின் பெருமைமிகு நட்சத்திரமான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது 5-வது வயதில் செஸ் விளையாடத் தொடங்கி, 12 வயதில் உலகின் இரண்டாவது இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றவர். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பலமுறை வீழ்த்தி, உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று, 2024 செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.

பிரக்ஞானந்தாவின் அர்ப்பணிப்பு, திறமை, மற்றும் விடாமுயற்சி இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கிறது. இவரது தாயார் நாகலட்சுமி மற்றும் சகோதரி வைஷாலியின் ஆதரவும் இவரது வெற்றிக்கு முக்கிய காரணம். இன்று இவரது பிறந்தநாளில், மேலும் பல உலக சாதனைகளைப் படைத்து, இந்தியாவின் புகழை உலகெங்கும் பரப்ப வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story