இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்‌சயா சென் வெற்றி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்‌சயா சென் வெற்றி
x
தினத்தந்தி 14 Jan 2026 2:23 PM IST (Updated: 14 Jan 2026 4:41 PM IST)
t-max-icont-min-icon

இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரர் ஆயுஷ் ஷெட்டியை எதிர்கொண்டார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரர் ஆயுஷ் ஷெட்டியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

1 More update

Next Story