சர்வதேச பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் இறுகிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சர்வதேச பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் இறுகிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

லக்னோ,

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான 32 வயது இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீராங்கனை தன்வி ஷர்மா 17-21, 16-21 என்ற நேர்செட்டில் ஹினா அகிசியிடம் (ஜப்பான்) பணிந்தார். இன்னொரு அரைஇறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 15-21, 10-21 என்ற நேர்செட்டில் துருக்கியின் நெலிஷன் அரினிடம் தோற்று நடையை கட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com