புரோ கபடி லீக்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்..? - பாட்னாவுடன் இன்று மோதல்

Image Courtesy: @ProKabaddi
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
சென்னை,
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 12 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 7 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்த்தில் உள்ளது.
பாட்னா அணி 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story






