பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-
பாரா சைக்கிள் ஓட்டுதல் (சாலை):-
ஆண்கள் தனிநபர் சாலை டைம் டிரையல் (பதக்க சுற்று) - அர்ஷத் ஷேக் - காலை 11.57 மணி
பெண்களுக்கான சி1-3 தனிநபர் சாலை டைம் டிரையல் (பதக்க சுற்று) - ஜோதி கதேரியா - மதியம் 12.32 மணி
பாரா துப்பாக்கிச்சுடுதல்;-
பி-4 கலப்பு 50மீ பிஸ்டல் எஸ்.எச்.1 (தகுதிச்சுற்று) - நிஹால் சிங் மற்றும் ருத்ரன்ஷ் கண்டேல்வால் - மதியம் 1.00 மணி
பாரா தடகளம்;-
ஆண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 (பதக்க சுற்று) - முகமது யாசர், ரோகித் குமார் மற்றும் சச்சின் சர்ஜராவ் கிலாரி - மதியம் 1.35 மணி
பாரா டேபிள் டென்னிஸ்;-
பெண்கள் ஒற்றையர் பிரிவு 4 (காலிறுதி) - பவினா படேல் - மதியம் 2.15
பாரா தடகளம்;-
பெண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 (பதக்க சுற்று) - அமிஷா ராவத் - மாலை 3.17 மணி
பாரா பவர் லிப்டிங்;-
ஆண்கள் 49 கிலோ (பதக்க சுற்று) - பரம்ஜீத் குமார் - மாலை 3.30 மணி
பாரா துப்பாக்கிச்சுடுதல்;-
பி-4 கலப்பு 50மீ பிஸ்டல் எஸ்.எச்.1 (இறுதிப்போட்டி - தகுதிபெற்றால்) - நிஹால் சிங் மற்றும் ருத்ரன்ஷ் கண்டேல்வால் - மதியம் 3.45 மணி
பாரா வில்வித்தை:-
ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் (1/16 வெளியேற்றுதல் சுற்று) - ஹர்விந்தர் சிங் - மாலை 5.49 மணி
ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் (1/8 வெளியேற்றிதல் சுற்று - தகுதிபெற்றால்) - ஹர்விந்தர் சிங் - மாலை 6.40 மணி
பாரா பவர் லிப்டிங்;-
பெண்கள் 45 கிலோ (பதக்க சுற்று) - சகினா காதுன் - இரவு 8.30 மணி
பாரா வில்வித்தை:-
ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் (காலிறுதி சுற்று - தகுதிபெற்றால்) - ஹர்விந்தர் சிங் - இரவு 9.17 மணி
ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் (அரையிறுதி சுற்று - தகுதிபெற்றால்) - ஹர்விந்தர் சிங் - இரவு 10.08 மணி
பாரா தடகளம்;-
ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) - தரம்பிர், பிரணவ் சூர்மா மற்றும் அமித் குமார் சரோஹா - இரவு 10.50 மணி
பாரா வில்வித்தை:-
ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் (வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி - தகுதிபெற்றால்) - ஹர்விந்தர் சிங் - இரவு 10.57 மணி
பாரா தடகளம்;-
பெண்கள் 100மீ டி12 (ஹீட்) - சிம்ரன் - இரவு 11.03 மணி
பாரா வில்வித்தை:-
ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் (இறுதிப்போட்டி - தகுதிபெற்றால்) - ஹர்விந்தர் சிங் - இரவு 11.14 மணி