பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: 2 பதக்கங்களை வென்ற இந்தியா
பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.
பாரீஸ்,
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் அஜீத் சிங் 65.62 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளது.
Related Tags :
Next Story