பாரீஸ் ஒலிம்பிக்: எதனை நினைத்தும் பயப்படாதீர்கள் - வீரர்களுக்கு நீரஜ் சோப்ரா அறிவுரை


பாரீஸ் ஒலிம்பிக்: எதனை நினைத்தும் பயப்படாதீர்கள் - வீரர்களுக்கு நீரஜ் சோப்ரா அறிவுரை
x
தினத்தந்தி 8 July 2024 7:23 PM IST (Updated: 16 July 2024 5:18 PM IST)
t-max-icont-min-icon

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வெளிநாட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), நிஜாத் ஜரீன் (குத்துச்சண்டை) ஆகியோர் ஆன்லைன் மூலம் பிரதமருடன் உரையாடினார்கள்.

இதில் இந்திய தடகள அணியின் தலைவர் நீரஜ் சோப்ரா ஆன்-லைன் மூலம் உரையாடுகையில் 'டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது முதல் ஒலிம்பிக் ஆகும். அதில் எனக்கு தித்திப்பான முடிவே கிடைத்தது. நான் நாட்டுக்காக தங்கம் வென்றேன். அப்போது என் மனதில் எந்த பயமும் இல்லை. எனக்கு தன்னம்பிக்கை அதிகம் இருந்தது. ஏனெனில் நான் நன்றாக பயிற்சி எடுத்திருந்தேன். நான் அனைத்து வீரர்களுக்கும் சொல்வது என்னவென்றால் யாரை கண்டும், எதனை நினைத்தும் பயப்படாதீர்கள். நாம் அனைவரும் நீண்ட காலமாக வீட்டை மறந்து கடினமாக பயற்சி எடுத்து வருகிறோம். அதனால் நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது' என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


Next Story