இந்திய பார்வையற்றோர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


இந்திய பார்வையற்றோர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 25 Nov 2025 6:37 AM IST (Updated: 25 Nov 2025 2:29 PM IST)
t-max-icont-min-icon

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த பார்வையற்றோருக்கான முதலாவது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘பார்வையற்றோருக்கான முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். தொடரில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற விதம் பாராட்டுக்குரியது. கடின உழைப்பு, கூட்டு முயற்சி, மனஉறுதிக்கு சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் சாம்பியன்கள். இந்த அணியின் வருங்கால முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துகள். இந்த சாதனை வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்’ என்றார்.

1 More update

Next Story