பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா

முதல் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா , டேவிட் நவராவுடன் (செக்குடியரசு) ஆகியோர் மோதினர்
பிராக்,
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் முதல் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா , டேவிட் நவராவுடன் (செக்குடியரசு) ஆகியோர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலில் டேவிட் நவராவுடன் டிரா கண்டார்.
மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 76-வது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானுடன் (செக்குடியரசு) டிரா செய்தார்.
Related Tags :
Next Story






