புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற தபாங் டெல்லி

Image Courtesy: @ProKabaddi
தபாங் டெல்லி அணி நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சென்னை,
12-வது புரோ கபடி லீக் தொடரில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் இந்த மோதலில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.
Related Tags :
Next Story






