புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @ProKabaddi
பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது.
புதுடெல்லி,
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்ததொடரில் சென்னையில் நடந்து வந்த லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், அடுத்த கட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதன்படி வருகிற 25-ந் தேதி தொடங்கும் பிளே-ஆப் சுற்று மற்றும் 31-ந் தேதி அரங்கேறும் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது.
Related Tags :
Next Story






