சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 2-வது வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா

கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 31-வது நகர்த்தலில் வென்றார்.
செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 7-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரெஜா பிரோவ்ஜாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 31-வது நகர்த்தலில் பிரோவ்ஜாவை வென்றார்.
5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக ‘டிரா’ கண்டிருந்த பிரக்ஞானந்தாவுக்கு இது 2-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 39-வது நகர்த்தலில் வெஸ்லி சோவிடம் (அமெரிக்கா) தோல்வியை தழுவினார்.
Related Tags :
Next Story






