தென் மண்டல பெண்கள் கைப்பந்து: பாரதியார் பல்கலைக்கழக அணி தோல்வி


தென் மண்டல பெண்கள் கைப்பந்து: பாரதியார் பல்கலைக்கழக அணி தோல்வி
x

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

சென்னை,

தென் மண்டல பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டி சென்னையை அடுத்த அச்சரபாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். விவசாய கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ‘நாக்-அவுட்’ சுற்று முடிவில் எஸ்.ஆர்.எம்., வேல்ஸ், பாரதியார் (தமிழ்நாடு), மகாத்மா காந்தி (கேரளா) ஆகிய பல்கலைக்கழக அணிகள் லீக் சுற்றுக்கு முன்னேறின. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25-17, 25-20, 25-12 என்ற நேர்செட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வேல்ஸ் அணி 25-16, 25-15, 25-19 என்ற நேர்செட்டில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தை வென்றது.

1 More update

Next Story