ஆக்ரோஷமாக கொண்டாடிய அமெரிக்க வீரர்....சைலண்டாக பதிலடி கொடுத்த குகேஷ்..வீடியோ


ஆக்ரோஷமாக கொண்டாடிய அமெரிக்க வீரர்....சைலண்டாக பதிலடி கொடுத்த குகேஷ்..வீடியோ
x

நகமுரா, குகேசின் ராஜாவை தூக்கி ஏறிந்து வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார்

செயின்ட் லூயிஸ்,

முன்னணி வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கிளட்ச் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் டாப் 3 இடங்களில் உள்ள மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), ஹிகாரு நகமுரா, பாபியானோ கருனா (இருவரும் அமெரிக்கா) மற்றும் உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா) பங்கேற்றுள்ளனர்.

தொடக்க நாளில் நடந்த ஒரு ஆட்டத்தில் குகேஷ், ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 46-வது நகர்த்தலில் நகமுராவை தோற்கடித்தார். சமீபத்தில் நடந்த இந்தியா- அமெரிக்கா இடையிலான காட்சி போட்டியில் நகமுரா, குகேசை வென்றார். அதனை தொடர்ந்து நகமுரா, குகேசின் ராஜாவை தூக்கி ஏறிந்து வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார். அதற்கு இந்த ஆட்டத்தில் குகேஷ் பழிதீர்த்து கொண்டார்.


நகமுராவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்ற பிறகு கைகுலுக்கி அமைதியுடன் வெற்றியை கொண்டாடினார்.




1 More update

Next Story