கபடி வீரர்களுக்கு இதுதான் முக்கியம்.. கார்த்திகா கருத்து


கபடி வீரர்களுக்கு இதுதான் முக்கியம்.. கார்த்திகா கருத்து
x

இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது

சென்னை,

பஹ்ரைனில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா ‘கில்லி’யாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கபடி வீரர்களுக்கு ஒழுக்கம் முக்கியம் என்று கண்ணகி நகர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில், காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் 8 கபடி வீரர்களை சந்தித்த கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷ்அபினேஷ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகா, கபடி வீரர்களுக்கு இலக்கும், ஒழுக்கம்தான் முக்கியம் என்றும், அது இருந்தால் பலரும் உதவி செய்வார்கள் என்றும் தமிழ்நாட்டிற்காக 11 முறை விளையாடி எட்டு முறை பதக்கங்கள் வென்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


1 More update

Next Story