பெண்கள் உலகக் கோப்பை கபடி: இந்தியா-ஈரான் இன்று மோதல்

அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-ஈரான், சீன தைபே-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
டாக்கா,
11 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 39-31 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்தது. இதேபோல் ‘பி’ பிரிவில் நடந்த இறுதி லீக் ஆட்டம் ஒன்றில் சீன தைபே அணி 63-28 என்ற புள்ளி கணக்கில் போலந்தை பந்தாடியது.
லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-ஈரான், சீன தைபே-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story






