சென்னை ஓபன் டென்னிஸ்: இந்தோனேஷிய வீராங்கனை சாம்பியன்


சென்னை ஓபன் டென்னிஸ்: இந்தோனேஷிய வீராங்கனை சாம்பியன்
x

இறுதிப்போட்டியில் ஜேனிஸ் டிஜென்-கிம்பெர்லி மோதினர்.

சென்னை,

2-வது சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸ் டிஜென், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜேனிஸ் டிஜென் 6-4 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 More update

Next Story