சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளிக்கு ‘வைல்டு கார்டு’

இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு ‘வைல்டு கார்டு’ அளிக்கப்பட்டுள்ளது
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளிக்கு ‘வைல்டு கார்டு’
Published on

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகையில் வைல்டு கார்டு சலுகை பெற்றிருந்த பிரான்ஸ் வீராங்கனை லூயிஸ் பாய்சன் கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு வைல்டு கார்டு அளிக்கப்பட்டுள்ளது. 23 வயதான பாமிதிபதி உலக தரவரிசையில் 377-வது இடம் வகிக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com