ஆகஸ்டு 15 சுவாரசியங்கள்


ஆகஸ்டு 15 சுவாரசியங்கள்
x

இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

* இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு 1947. ஆகஸ்டு 15-ல் நமது நாட்டுக்காக ஒரு தேசிய கீதம் இல்லை. 1911-ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950-ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கொல்கத்தாவில் மத மோதல்களை எதிர்த்து உண்ணா விரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

* அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட் ஆகியோர் ஆகஸ்டு 15-ல் பிறந்தவர்கள்.

* மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி ஆகியோர் ஆகஸ்டு 15-ல் இறந்தவர்கள்.

* 1947-ல் இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்கு சமமாக இருந்தது.

* இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்டு 15 அன்று தென்கொரியா, பக்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகளும் சுதந்திர தினம் கொண்டாடுகின்றன.

* இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். இதன் மூலம் அதிக முறை கொடியேற்றிய பிரதமர் என்ற பெருமையை நேரு பெறுகிறார்.


Next Story