சிக்னல் பழுது: சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம் - பயணிகள் அவதி


சிக்னல் பழுது: சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம் - பயணிகள் அவதி
x

கோப்புப்படம்

சிக்னல் பழுது காரணமாக சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் ரெயில்வே மார்க்கத்தில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி விரைவு ரெயில்கள், புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில்கள் வருகையில் சுமார் 1 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.

மேலும் நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னைக்கு தாமதமாக செல்கின்றன. ரெயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story