இன்றைய ராசிபலன் - 26.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய ராசிபலன் - 26.09.2024
Published on

இன்றைய பஞ்சாங்கம்:

வியாழக் கிழமை குரோதி வருடம் புரட்டாசி மாதம்10-ந்தேதி வியாழக் கிழமை.

நட்சத்திரம் இன்று அதிகாலை 04-11 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி இன்று மாலை 05-30 வரை நவமி பின்பு தசமி

யோகம்: அமிர்த யோகம்

நல்ல நேரம் மாலை : 10-45 - 11-45

ராகு காலம் பிற்பகல் : 1-30 to 3-00

எமகண்டம் காலை : 6-00 - 7-30

குளிகை காலை : 9-00 - 10-30

கவுரி நல்ல நேரம் காலை 12-15 - 1-15

கவுரி நல்ல நேரம் மாலை 6-30 - 7-30

சூலம் தெற்கு

சந்திராஷ்டம்: அனுஷம்

இன்றைய பலன்கள்

மேஷம்

அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். ஆரோக்கிய நிலை மேம்படும். நண்பர்கள் கைக் கொடுப்பர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அரசியலில் நாட்டம் கூடும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

ரிஷபம்

பிள்ளை நன்கு படிப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மருத்துவர்கள் செழிப்பர். சகோதர வகையில் உதவிகள் உண்டு. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மிதுனம்

காய்கறி வியாபாரிகள் பயனடைவர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கடகம்

பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும். யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு.

அதிர்ஷ்ட நிறம் பொன்நிறம்

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

மாணவர்கள் சுற்றுலா செல்ல பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். பிடித்த நபரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கன்னி

சுப காரியங்கள் தாமதமாகும். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

துலாம்

குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். இளைஞர்கள் காதலில் எச்சச்ரிக்கையாக இருப்பது நலம் குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

தனுசு

பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். வேலைகள் தள்ளிப் போகும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

மகரம்

எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. காதலர்கள் பொறுப்புணர்வர். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை

கும்பம்

உத்யோகஸ்தர்களுக்கு நிர்வாகத்திறனை பார்த்து மேலதிகாரிகள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்

மீனம்

குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பர். முகம் புதுப்பொலிவு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com