காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story