தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகும்:  இந்திய வானிலை ஆய்வு மையம்
x

தென்னிந்திய பகுதிகள், மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. பொதுவாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில், 8 நாட்களுக்கு முன்பாக மே 24-ந்தேதியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

2009-ம் ஆண்டில், மே 23-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதற்கு 16 ஆண்டுகளுக்கு பின்னர், முதன்முறையாக கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை குறிப்பிடும்படியாக தென்னிந்தியாவில் இயல்பை விட அதிகம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

இதன்படி, தென்னிந்திய பகுதிகள், மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும். வடமேற்கு இந்தியாவில் மழை இயல்பாகவும், வடகிழக்கில் இயல்புக்கு குறைவாகவும் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story