தெற்கு ரெயில்வேயில் பணி


தெற்கு ரெயில்வேயில் பணி
x

தெற்கு ரெயில்வேயில் 14 ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணி இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

3 ஆண்டு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் மற்றும் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் சிவில் என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. தேர்வு பட்டியல், நுண்ணறிவு திறன் சோதனை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தென்னக ரெயில்வேயில் சென்னை கட்டுமான பிரிவில் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-10-2023.

மேலும் விரிவான விவரங்களை https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 More update

Next Story