சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதாரத்துறையில் 332 ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (கிரேடு 3) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12-6-2023 அன்றைய தேதிப்படி 12-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஓராண்டு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நல்ல உடல் அமைப்பு, தெளிவான பார்வைத் திறன் கொண்டிருக்க வேண்டும். 18 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், கணவரை இழந்த பெண்கள் போன்றவர்களுக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு. அத்துடன் அரசு விதிமுறைகளின்படியும் வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
பள்ளிப் படிப்பிலும், ஆய்வக தொழில்நுட்ப படிப்பிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2-7-2023.
விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://mrbonline.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.






