நட்சத்திர பலன்


24-2-2018 முதல் 2-3-2018 வரை

ஆரோக்கியம்

1. அஸ்வினி: திட்டங்கள் பல தீட்டுவீர்கள். ஆனால் அவற்றில் ஒன்றிரண்டு தான் நிறைவேறும். உத்தியோக சூழல் மகிழ்ச்சி தருவதாக அமையும். நெடிய பயணம் தள்ளிப்போகும். பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். ஆரோக்கியம் சீராகும்.

பரிகாரம்: தீப வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

பதவி சுகம்

2. பரணி: கணிதம், எழுத்து, பத்திரிகை துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழியில் இருந்த மனக்கசப்பு அகலும். பிள்ளைகள் வழியில் உபரி வருமானம் கிடைக்கக் கூடும். ஒரு சிலருக்கு பட்டம், பதவிகள் தேடி வரும்.

பரிகாரம்: லட்சுமி வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

நிர்வாகம் சிறக்கும்

3. கார்த்திகை: சட்டம், நிர்வாகத்துறையினர் தங்கள் பணிகளில் முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு சிறுசிறு குடும்ப பிரச்சினைகள் தோன்றி மறையும். கணவன் - மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

பரிகாரம்: சரபேஸ்வரர் வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

திட்டம் வெற்றி

4. ரோகிணி: இளைஞர்களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாகும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப் படும். பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. தீட்டிய திட்டங்கள் வெற்றியாகும்.

பரிகாரம்: இஷ்ட தெய்வ வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

சுபகாரியம் கைகூடும்

5. மிருகசீரிஷம்: அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு பெயர், புகழ், செல்வாக்கு உயரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். திட்டமிட்டு செயலாற்றிய காரியங்களில் தடை வரலாம். காரியங்கள் நிறைவேற நண்பர்கள் உதவியை நாடுவீர்கள்.

பரிகாரம்: குரு பகவான் வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

வழக்கு சாதகம்

6. திருவாதிரை: கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சி தரும். பெண்கள் மற்றும் கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுங்கள். வியாபாரம் பெருக, வடகிழக்கு, வடமேற்கு திசை பயணம் நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். நீதிமன்ற வழக்கு சாதகமாகும்.

பரிகாரம்: நடராஜர் வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

செல்வாக்கு உயரும்

7. புனர்பூசம்: ஆன்மிகவாதிகள், சட்டவல்லுநர்கள், கல்வி துறையினர் தங்களின் பொருளாதார நிலை உயரப் பெறுவார்கள். அலுவலகப் பணியாற்றுபவர்களின் திறமை பளிச்சிடும். திருமணம் கைகூடிவரும். கணவன் - மனைவி உறவு இனிமை தரும். செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: அன்னதானம்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

லாபம் உண்டு

8. பூசம்: கலைஞர்கள், அரசியல், கலை, இலக்கிய வாதிகளுக்கு முன்னேற்றமான வாரம் இது. பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன்- மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு மறையும். அடக்கத்துடன் நடந்து கொண்டால் சாதனைகள் பல புரிய வாய்ப்பு ஏற்படும்.

பரிகாரம்: இஷ்ட தெய்வ வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

சேமிப்பு வளரும்

9. ஆயில்யம்: விரயங்களை சமாளிப்பீர்கள். பணம் சம்பாதிக்கும் வழியை தெரிந்து கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் சுமுகமாகும். கலைஞர்கள், தங்கள் பணியில் புது அனுபவம் பெறுவார்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: அன்னதானம்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

முன்னேற்றம்

10. மகம்: ஆலய வழிபாடு ஆனந்தம் அளிக்கும். வாரிசுகளால் நன்மைகள் கிடைக்கப்பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பங்குவர்த்தகம் லாபம் தரும். எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில் போட்டி அதிகரிக்கலாம்.

பரிகாரம்: சயன பெருமாள் வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

பொருளாதார உயர்வு

11. பூரம்: விழிப்புடன் செயல்பட்டால் விபத்து தவிர்க்கப்படும். சோதனைகளை சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும் வாரம் இது. அரசு வழியில் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் வழியில் வருமானம் வரும். பெண்களின் திறமை பளிச்சிடும்.

பரிகாரம்: வெங்கடாஜலபதி வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

அதிக லாபம்

12. உத்திரம்: கற்பனை வளம் கூடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். நீண்ட தூர பயணத்தால் சங்கடம் உண்டாகலாம். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினை குறையும். உணவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பரிகாரம்: ஏழைகளுக்கு உதவுங்கள்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

இல்லத்தில் கலகலப்பு

13. ஹஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். மாமியார்- மருமகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். சுப காரிய நிகழ்வுகளால், இல்லத்தில் மகிழ்ச்சி கூடும்.

பரிகாரம்: கணபதி வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

அக மகிழ்ச்சி

14. சித்திரை: பண நடமாட்டம் அதிகரிக்கும். இருந்தாலும் செலவுகளும் கூடுதலாக வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கிடைக்கலாம். தொழில் போட்டிகள் விலகும் இனிய வாரம் இது. வாடிக்கையாளர்களின் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: வராகி வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

சோம்பல் வேண்டாம்

15. சுவாதி: இரும்பு, எண்ணெய், திரவப் பொருட்கள், கடலில் இருந்து கிடைக்கும் சாதனங்களால் லாபம் ஏற்படும். பொருளாதார உயர்வால் மகிழ்வீர்கள். சோம்பலை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது பிரச்சினையைத் தவிர்க்கும்.

பரிகாரம்: சித்தர் சமாதி வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

திறமை பளிச்சிடும்

16. விசாகம்: கலகலப்பான செய்தி இவ்வார ஆரம்பத்தில் வந்துசேரும். சில காரியங்கள் உங்களது திறமையால் வெற்றியாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். தொழில் போட்டியை சமாளிக்க விழிப்புணர்வு தேவை.

பரிகாரம்: சக்கரத்தாழ்வார் வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

எண்ணங்கள் ஈடேறும்

17. அனுஷம்: எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். ராணுவத் துறையினர் தங்கள் வேலைகளில் வெற்றிநடை போடுவார்கள். கல்வியில் மாணவர் களின் திறமை பளிச்சிடும். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இல்லத்தில் மகிழ்ச்சி ததும்பும் இனிய வாரம் இது.

பரிகாரம்: துவரை தானம்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

இனிமை கூடும்

18. கேட்டை: பழைய பாக்கிகள் வசூலாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கை கூடும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவி உறவில் இனிமை கூடும். பிள்ளைகளால் பிரச்சினைகள் வரலாம். உங்களின் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும்.

பரிகாரம்: சூரியனுக்கு பிரீதி செய்யுங்கள்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

புகழ் ஓங்கும்

19. மூலம்: பொதுத் துறையில் பணிபுரிபவர் களுக்கு பலரின் பாராட்டு கிடைக்கும். உன்னதமான பலன்கள் நடைபெறும். பொது நலப் பணியாளர்களின் பெயர், புகழ் கூடும். வியாபாரிகள் லாபம் காண்பர். பிள்ளைகளை உங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: உளுந்து தானம்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

சுறுசுறுப்பு

20. பூராடம்: மனதில் உற்சாகம் கூடும். எண்ணங்கள் ஈடேறும் இனிய வாரமாகும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியறிவில் முன்னேற்றம் காண்பார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.

பரிகாரம்: எள் தானம்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

படை வெல்லும்

21. உத்திராடம்: ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் முன்னேற்றம் தருவதாக அமையும். காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பிள்ளைகள் வழியில் வருமானம் பெருகும். கணவன் - மனைவி உறவில் இனிமை கூடும்.

பரிகாரம்: குபேரன் வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

ஒற்றுமை வளரும்

22. திருவோணம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறையும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.

பரிகாரம்: ஆலயத்தில் தீபம் ஏற்றுதல்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

உடல்நலம் சீராகும்

23. அவிட்டம்: தன்னம்பிக்கை வளரும். உடல் நலம் சீராகும். உணவு முறையில் இருந்த கட்டுப்பாடு விலகும். ஒரு சிலருக்கு பட்டம், பதவி தேடிவரும். தவணை முறையில் கடன்களை அடைப்பீர்கள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

பரிகாரம்: சித்தர் ஜீவசமாதி வழிபாடு
24-2-2018 முதல் 2-3-2018 வரை

செய்தொழில் வெற்றி

24. சதயம்: செய்தொழிலில் எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில் தொடங்க, முதலீட்டை பெருக்க பொன்னான காலமாகும். மனதில் துணிவு பிறக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். கணவன் - மனைவி உறவு இனிக்கும்.

பரிகாரம்: நெய்தீபம் ஏற்றுங்கள்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

வருமானம் உயரும்

25. பூரட்டாதி: ஊக்கம், உற்சாகம் பெருகும். பணிச்சுமை குறையும். இரவு பயணத்தின் போது விழிப்புணர்வு தேவை. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றியாகும். ஒரு சிலருக்கு பட்டம், பதவி தேடி வரும். பிள்ளைகளை அரவணைத்து செல்லுங்கள்.

பரிகாரம்: ஆலயத்தில் தீபம் ஏற்றுங்கள்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

ஆபத்து நீங்கும்

26. உத்திரட்டாதி: வாழ்வில் முன்னேற்றம் காண முக்கிய புள்ளிகள் சந்திக்க ஏற்ற வாரமாகும். விழிப்புடன் செயல்பட்டால் வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். உங்களின் அந்தஸ்து உயரும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும்.

பரிகாரம்: பச்சரிசி தானம்
24-2-2018 முதல் 2-3-2018 வரை

மக்களால் மகிழ்ச்சி

27. ரேவதி: விவாகப் பேச்சுகள் முடிவாகும். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்ப வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு. பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.

பரிகாரம்: லலிதா சகஸ்ரநாம ஜபம் 

Astrology

2/25/2018 3:25:55 PM

http://www.dailythanthi.com/Astrology/StarBenefits