ஒரே கதையில் 2 படமா?


ஒரே கதையில் 2 படமா?
x

விடுதலை, ரத்த சாட்சி ஆகிய இரண்டு படங்கள் ஒரே கதை சாயலில் தயாராகி இருப்பதாக வலைத்தளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது.

விடுதலை படத்தை வெற்றி மாறன் டைரக்டு செய்கிறார். இதில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிக்கின்றனர். ரத்த சாட்சி படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரபிக் இஸ்மாயில் டைரக்டு செய்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியாகி விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இரண்டு படங்களுமே நக்சலைட்களுக்கும், போலீசுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசும் படமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து டைரக்டர் ரபிக் இஸ்மாயில் கூறும்போது, ''இரண்டு படங்களும் ஒரே விஷயத்தை பேசினாலும் கதைக்களமும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களும் வெவ்வேறானவை. ரத்த சாட்சிஆயுத போராட்டத்தை நியாயப்படுத்தாமல் அமைதியை வலியுறுத்தும் படமாக இருக்கும்" என்றார்.


Next Story