தேர்தல் கமிஷனில் புகார் - ‘நோட்டா’ படத்துக்கு தடை?


தேர்தல் கமிஷனில் புகார் - ‘நோட்டா’ படத்துக்கு தடை?
x
தினத்தந்தி 3 Oct 2018 4:30 AM IST (Updated: 3 Oct 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், நோட்டா படத்துக்கு தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.


தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமாகி உள்ள விஜய் தேவரகொண்டா நடித்துள்ள முதல் தமிழ் படம் ‘நோட்டா. இதில் மெஹ்ரின் கதாநாயகியாக வருகிறார். நாசர், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்த் சங்கர் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் நடித்த இருமுகன், விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி படங்களை டைரக்டு செய்தவர்.

நோட்டா படம் 5-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கு மொழியிலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நோட்டா படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அதை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் தணிக்கை குழு முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வர் ரெட்டி தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளார்.

“ஓட்டுபோட விரும்பாத வாக்காளர்கள் தங்கள் வாக்கை நோட்டாவில் பதிவு செய்யலாம் என்பது வழக்கம். நோட்டா படம் வேட்பாளர்களை தேர்வு செய்ய விரும்பாதவர்கள் செயலை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எல்லோரும் நோட்டாவில் வாக்கை பதிவு செய்தால் தேர்தல் குழப்பமாகி விடும். தெலுங்கானாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த படத்தை பார்த்தால் நோட்டாவில் வாக்குப்பதிவு செய்வார்கள். போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் படத்தை பார்த்த பிறகே திரையிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்று புகாரில் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story