புத்தாண்டு பிறந்ததையொட்டி டுவிட்டரில் வாழ்த்திய நடிகர்-நடிகைகள்


புத்தாண்டு பிறந்ததையொட்டி டுவிட்டரில் வாழ்த்திய நடிகர்-நடிகைகள்
x
தினத்தந்தி 2 Jan 2019 4:41 AM IST (Updated: 2 Jan 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு பிறந்ததையொட்டி டுவிட்டரில், நடிகர்-நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


நடிகர்-நடிகைகள் பலர் புத்தாண்டை கேக் வெட்டியும், கோவில்களுக்கு சென்றும் கொண்டாடினார்கள். டுவிட்டரில் வாழ்த்துக்களையும் பதிவிட்டனர். நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இரண்டை கடந்து, பூஜ்ஜியத்தை கடந்து, ஒன்றை கடந்து, எட்டை கடந்தும், ஒன்பது என்பதை கடக்க.. முதல் அடி இன்று. என்றும் இன்றாய் இனிதாய் ஹேப்பி நியூவாக..” என்று வாழ்த்தியுள்ளார்.

நடிகை சாய் தன்சிகா, “எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2018-ல் நிறைய நினைவுகள் நமக்குள் இருக்கும். நிறைய படிப்பினையும் கிடைத்து இருக்கும். நடந்தவைகளை பின்னால் தள்ளிவிட்டு 2019-ல் மகிழ்ச்சியாக இருப்போம். சந்தோஷம் என்பது மிக முக்கியம். புதிய வருடத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதிவ்யா, “எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் இலக்கை அடைவோம்” என்று கூறியுள்ளார். நடிகை சாயிஷா, “2018-ம் வருடம் இனிமையாக அமைந்தது. புத்தாண்டில் மகிழ்ச்சியும் வெற்றிகளும் நிலைக்கட்டும்” என்று கூறியுள்ளார். டைரக்டர் அருண்ராஜா காமராஜ், “நம் கனாக்கள் கைசேர இந்த ஆண்டும் உழைப்போம். வெல்வோம். 2018 நமக்கு தந்ததை விட பன்மடங்கு மகிழ்ச்சியை இந்த 2019 தரட்டும். அன்பே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரபுதேவா “எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் சந்தானம், ராகவா லாரன்ஸ், அதர்வா ஆகியோரும் வாழ்த்தை பதிவிட்டுள்ளனர்.


Next Story