வலைத்தளத்தில் அவதூறு பிரபல நடிகை போலீசில் புகார்


வலைத்தளத்தில் அவதூறு பிரபல நடிகை போலீசில் புகார்
x
தினத்தந்தி 13 Oct 2021 12:57 AM IST (Updated: 13 Oct 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

பிரபல இந்தி நடிகை சுவரா பாஸ்கர். இவர் தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்து பிரபலமானார்.

பிரபல இந்தி நடிகை சுவரா பாஸ்கர். இவர் தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்து பிரபலமானார். தனு வெட்ஸ் மனு, சில்லர் பார்ட்டி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். படங்களில் சுவரா பாஸ்கர் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். இதனால் சர்ச்சைக்கு உள்ளானார். அவரை பலர் கண்டித்தனர். சமீபத்தில் தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக புகார் கூறியிருந்தார். போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குறித்தும் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதாக டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் போலீசில் சுவரா பாஸ்கர் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், ‘‘நான் நடித்துள்ள படத்தின் காட்சி ஒன்றினை மையமாக வைத்து டுவிட்டரிலும், யூடியூப்பிலும் என்னை இழிவுபடுத்தி தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

1 More update

Next Story