ஷாருக்கான் –அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா


ஷாருக்கான் –அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா
x
தினத்தந்தி 26 Nov 2021 3:08 PM IST (Updated: 26 Nov 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நயன்தாராவே நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, முதன்முதலாக ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பார் என்று பேசப்பட்டார். இந்த நிலையில், அந்த படத்தில் இருந்து நயன்தாரா திடீரென்று விலகிக்கொண்டதாகவும், அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என்றும் கூறப்பட்டது. இப்போது சமந்தா நடிக்கவில்லை என்றும், நயன்தாராவே நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் ஷாருக்கானின் மனைவி கவுரி என்கிறார்கள்.

லயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். சில காரணங்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு, ஷாருக்கான் உடன் நயன்தாரா நடித்திருந்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவி கௌரி கான், நயன்தாரா – ஷாருக்கான் கெமிஸ்ட்ரி நன்றாக வந்துள்ளது. மேலும், அவர் புனே ஹிந்தியை சரளமாக பேசுவதால் மற்ற காட்சிகள் எடுக்க எளிதாக இருக்கும் எனவே, மீதம் உள்ள காட்சிகளையும் நயன்தாராவை வைத்தே எடுத்துவிடுங்கள் என படகுவுக்கு சிபாரிசு செய்துள்ளாராம்.

இதனால் படக்குழு மீண்டும் நயன்தாராவை அணுகி அவரை மீண்டும் படத்தில் இணைத்துள்ளதாம். விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story